மெக்ஷிக்கோவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 383 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய மெக்ஷிக்கோவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இன்றைய நாளின் இதுவரையான காலப்பகுதியில் 93 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 154 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை தொற்றுக்குள்ளானவர்களுள் 13 ஆயிரத்து 447 பேர் குணமடைந்துள்ள நிலையில் 378 பேர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மெக்ஷிக்கோ சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.