கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸ் தனது நாட்டில் பிரகடனப் படுத்தியுள்ள அவசர நிலையை தொடர்ந்தும் நீடித்துள்ளது.
இதற்கமைய, பிரான்ஸில் அவசர நிலை எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் 212 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்ஸில் 1 இலட்சத்து 69 ஆயிரத்து 462 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் பிரான்ஸில் இதுவரை 25 ஆயிரத்து 201 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, பிரான்ஸில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்த நாள் முதல் அங்கு அவசர நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரான்ஸில் கொரோனா வைரஸி ன் தாக்கம் இன்னும் குறைவடையாததன் காரணமாக நாடு முழுவதும் அமுலில் இருக்கும் அவசர நிலையை பிரான்ஸ் அரசாங்கம் தொடர்ந்தும் நீடித்துள்ளது.