மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலைகள், பல்கலைக்கழக நடவடிக்கைகள் எப்போது ஆரம்பம்?

- Advertisement -

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் காலதாமதம் ஆகலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக பாடசாலைகள் எதிர்வரும் 11ஆம் திகதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து அறிவிக்கப்படவில்லை.

- Advertisement -

பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன ஒன்றிணைந்து தற்போதைய சூழ்நிலை குறித்து ஆராய்ந்து அதன்படி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள முடியும் என உயர் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய பாதுகாப்பான சூழல் உருவாகும் வரை பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட மாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படவில்லை என்றாலும் இணையத்தளம் மூலம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையின் அடிப்படையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்திருந்தார்.

அத்துடன், கொரோனா வைரஸ் பரவலின் நிலைமை மற்றும் பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியன தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வவுனியாவில் டிப்பர் – பேரூந்து விபத்து : ஒருவர் படுகாயம்!

வவுனியாவில் டிப்பருடன் பேரூந்து மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து ஏ9 வீதியூடாக ஒமந்தை நோக்கி டிப்பர் வாகனத்தினை...

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம்!

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணத்தில்  உள்ள ஆளுநர் செயலகத்தில் குறித்த கொரோனா ஒழிப்பு செயலணி...

பேலியகொடை மீன் சந்தையை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை!

பேலியகொடை மீன் சந்தையை திறப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம்...

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க!

தற்போதைய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தியிள்ளதாக இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், "அரசியலமைப்பில் மாற்றம்...

கட்சித் தாவும் உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் :

கட்சித் தாவும் எண்ணத்துடன் செயற்படுபவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் ஒரு போதும் இடம் வழங்கப்படமாட்டாது என  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி  தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம்...

Developed by: SEOGlitz