நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடல் இன்று காலை 10.30 முதல், அலரி மாளிகையில் இடம்பெற்றது.
கொரோனா தாக்கத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால நிலைமைகள் குறித்து சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் ஐக்கியக் தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் குறித்த கலந்துரையாடலை புறக்கணித்திருந்தன.
இந்த நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தது.
அத்துடன், 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன், பிரதமர் செயலாளர் காமினி செனரத், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், சுகாதாரப் பிரிவின் பிரதானிகள் மற்றும் கொவிட் 19 ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.