மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா : குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

- Advertisement -

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 21 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

- Advertisement -

அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 559 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொள்ளாயிரத்து 81 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 21 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அவர்களில் இருவர் பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய, 19 பேரும் கடற்படையினர் எனவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான 413 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்படி, , தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை, வெலிக்கந்த ஆதார வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, இராணுவ வைத்தியசாலை, ஹோமாகமை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கடந்த 22ஆம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் 673 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, கடற்படையினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 576 பேரும், ஏனைய 97 பேரும் குறித்த காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக, 44ஆயிரத்து 391 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

நேற்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 254 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் சடுதியாக அதிகரித்த உயிரிழப்புக்கள்!

கொரோனா தொற்றினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 428 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து...

சுகாதார வழிமுறைகளுடன் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானம் : பிரதி சபாநாயகர்!

கொரோனா தொற்று குறித்த உரிய சுகாதார வழிமுறைகளை கையாண்டு நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பது குறித்து நாளை நடைபெறவுள்ள கட்சி...

வவுனியாவில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருத்துவ கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்கள் மூவர்...

புலமைப் பரிசில் பரீட்சை மூலம் பாடசாலை அனுமதிக்குத் தடை? : அமைச்சர் பந்துல!

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை மையமாகக் கொண்டு பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறை குறித்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Developed by: SEOGlitz