கொல்கத்தாவிலிருந்து 125 இலங்கை மாணவர்களை ஏற்றிக்கொண்ட யு.எல். 1188 விமானம் இன்று (ஏப்ரல் 30) மாலை நாட்டை வந்தடைந்தமையுடன், தெற்காசியப் பிராந்தியத்தைத் தளமாகக் கொண்ட 1065 இலங்கை மாணவர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான 10 நாட்களுக்கும் மேலாக இடம்பெற்ற நடவடிக்கைகள் வெற்றிகரமான நிறைவடைந்தன.
கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக இலங்கைக்கு மீளத் திரும்புவதற்கான தமது விருப்பத்தை வெளிப்படுத்திய இலங்கை மாணவர்களை மீள அழைத்து வருவதற்காக, 2020 ஏப்ரல் 21ஆந் திகதி முதல், மொத்தமாக ஒன்பது (9) ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் சிறப்பு விமானங்கள் இந்தியா (பஞ்சாப், மும்பை, கோயம்புத்தூர், பெங்களூர், புதுடில்லி மற்றும் கொல்கத்தா), பாகிஸ்தான் (கராச்சி மற்றும் லாகூர்), நேபாளம் (காத்மண்டு) மற்றும் பங்களாதேஷ் (டாக்கா) ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. குறித்த நாடுகளில் கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களை நிறைவு செய்த பொது மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் இலங்கையில் தமது உத்தியோகபூர்வக் கடமைகளை மீள முன்னெடுக்க வேண்டியிருந்தவர்கள் ஆகியோர் குறித்த நாடு திரும்பியவர்களில் உள்ளடங்குவர். நாடு திரும்பிய அனைவரும் தற்போது இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகளிலான கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டிற்கு மீள திரும்பி வருவதற்கு விரும்பும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வகையிலான வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பற்றிய தரவுகளின் பகுப்பாய்வு மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பரிந்துரையைத் தொடர்ந்து, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவதற்காக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையினால், நாட்டிற்கு மீளத் திரும்பும் முதல் வகையினராக தெற்காசியாவிலுள்ள மாணவர்கள் இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏப்ரல் 14 ஆந் திகதி அறிவுறுத்தினார். தெற்காசியாவிலுள்ள இலங்கைத் தூதரகங்கள், ஜனாதிபதி செயலகம், கோவிட்-19 பணிக்குழு மற்றும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுடனான நெருக்கமான ஒத்துழைப்புடன், உலகளாவிய தொற்றுநோயால் ஏற்படும் சிக்கல்களால் எழுந்த பல சவால்களுக்கு மத்தியில், இப்பகுதியிலுள்ள பல நகரங்களில் தரித்துள்ள மாணவர்களின் பாதுகாப்பான மீள் வருகையை அந்தந்த வெளிநாட்டு அரசாங்கங்களின் வலுவான உதவியுடன் அமைச்சு உறுதி செய்தது.
முதல் கட்டமாக, நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான செயன்முறையை அமைப்பதற்காக மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் தேவையான வலையமைப்பை உருவாக்குவதற்காக, தமது அதிகார வரம்புகளிலுள்ள மாணவர்களின் தரவுகளை சேகரிக்கும் பணிகளை டாக்கா, காத்மாண்டு, புதுடில்லி, இஸ்லாமாபாத், சென்னை, மும்பை மற்றும் கராச்சி போன்ற தெற்காசியாவிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் உதவித் தூதரகங்கள் மேற்கொண்டன. வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் தெற்காசியா மற்றும் சார்க் பிரிவின் தலைவரான பணிப்பாளர் நாயகம் அருணி ரணராஜ இந்தப் பணிகளை தூதரகங்களுடன் ஒருங்கிணைத்தார். நாட்டிற்கு மீள அழைத்து வரல் மற்றும் தனிமைப்படுத்தல் செயன்முறைகள் ஆகிய இரண்டையும் நெறிப்படுத்தும் நோக்கத்துடன், ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழுவுடன் கலந்தாலோசித்து, வகைப்படுத்துதல் மற்றும் குழு உருவாக்கம் உள்ளிட்ட ஒவ்வொரு இடத்திற்குமான விரிவான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. குழுக்களை நாட்டிற்கு மீள அழைத்து வரும்
– வெளிநாட்டு உறவுகள் அமைச்சு