மெய்ப்பொருள் காண்பது அறிவு

சம்மாந்துறை பிரதேசத்தில் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு மீண்டும் ஆரம்பம்!

- Advertisement -

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கு அமைய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மே மாதத்துக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 51 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்டோர் ,வலது குறைந்தோர்,சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தலா 5000 ரூபா வீதம் 2165 பயனாளர்களுக்கு கிராம சேவையாளர்களிடம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

நேற்றும் இன்றும் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா,சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக்,சம்மாந்துறை நிர்வாக கிராம உத்தியோகத்தகர் எம்.எல் தஸ்னீம்,கிராம சேவையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 51 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்டோர்,வலது குறைந்தோர்,சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தலா 5000 ரூபா வீதம் 2165 பயனாளர்களுக்கு வீட்டுக்கு வீடு சென்று வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சீனாவில் மீண்டும் 51 பேருக்கு கொரோனா தொற்று!

சீனாவில் மீண்டும் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களில் 40 பேருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வுகான் மாகாணத்தினைச் சேர்ந்தவர்கள்...

தேர்தல் வர்த்தமானி விவகாரம் : இன்றும் மனுக்கள் பரிசீலணை!

நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று காலை 10 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. குறித்த...

வலைத்தளங்களில் வௌியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் : கல்வியமைச்சு!

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை என கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ...

66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு – வெளியே செல்லும் உங்களுக்கு விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில், அலுவலக...

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளின் கால எல்லையை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை கால எல்லையை முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை...