மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களின் வசதிக்காக விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு!

- Advertisement -

கொவிட் – 19 பரம்பலினால் நிதி நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் பாதிக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களினால் எதிர்கொள்ளப்படும் கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி கடன் பிற்போடுதல் மற்றும் இரண்டு மாத தொழிற்படு மூலதனத்திற்காக 4 சதவீத வருடாந்த வட்டியுடைய மீள்நிதியிடல் வசதி போன்றவற்றிற்கான வேண்டுகோளைச் சமர்ப்பிக்கும் முடிவுத் திகதியினை 2020.04.30 இருந்து 2020.05.15 வரை நீடித்திருக்கின்றது. மேலும், ரூ.500,000 இற்கு உட்பட்ட பெறுமதியுடைய காசோலைகளின் செல்லுபடிக்காலம் காலாவதியாகியிருக்குமிடத்தில், 2020 மே 15 வரை அதனுடைய செல்லுபடியாகும் காலமாகக் கருத்திற்கொள்ள வேண்டுமென வங்கிகள் வேண்டிக்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான நீடிப்புக்கள் 2020.04.28ஆம் திகதியிடப்பட்ட 2020இன் 06ஆம் இலக்க சுற்றறிக்கையினூடாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.

தகுதியான வியாபாரங்கள் மற்றும் தனிநபர்கள் இவ்வாறான நிவாரணகளைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் அவர்கள் தேவையான தகவல்கள்/ ஆவணங்களுடன் தங்களுடைய வங்கிகளை முடிவுத்திகதிக்கு முன்னர் தொடர்புகொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர். இந்நிவாரணங்களானது தகுதியுடைய கடன்களின் ஏற்கனவே இருக்கின்ற கடனுக்குரிய காலத்தினை கடனைப் பிற்போடக்கூடிய காலத்தினால் நீடித்துக்கொள்வதற்கு வங்கிகளை வேண்டிக்கொள்கின்றது. இவ்வண்ணம் நீடிக்கப்பட்ட காலப்பகுதியில் மேலதிகச் செலவுகள் ஏதுமில்லாமல் பிற்போடப்பட்ட கடனின் தவணைப் பணத்தினை மீளச்செலுத்துவதற்கு நாங்கள் கடன் பெறுநர்களை வற்புத்துகின்றோம், எனவே, இவ்வாறாகக் கிடைக்கப்படும் நிதியினால் வங்கிகளும் அவைகளின் திரவ நிலையை பலப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

- Advertisement -

– இலங்கை மத்திய வங்கி

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேல் மாகாணத்தில் ஊரடங்கு – எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்குத் தீர்மானம்

மேல் மாகாணத்தில்  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்  வழமைப்போன்று திறக்கப்படும் என இலங்கை  பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெற்றோலியக்  கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி  பொலிஸ்...

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் நடவடிக்கை அறிமுகம்

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் புதிய வழிமுறையொன்றினை   கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி  அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில்,...

கொரோனா தொற்று – புதிய செயலி அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் புதிய (APP) செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள்,...

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் விடுத்த அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே...

Developed by: SEOGlitz