மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு தொற்றுள்ளதாக மக்கள் பீதியடைய தேவையில்லை!

- Advertisement -
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு தொற்றுள்ளதாக மக்கள் பீதியடைய தேவையில்லை. அவர்களின் உடலில் உள்ள இறந்த வைரஸ்கள் தொற்றுள்ளதாக காட்டும்.
என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் திருமதி ரஜந்தி ராமச்சந்திரன் ஆகியோர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
நேற்றய தினம் யாழ்.மாவட்டத்தில் 27 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது,  இதன்போது ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று திரும்பிய 6 பேருக்கு நடாத்தப்பட்ட பரிசோதனையில்
5 பேருக்கு தொற்றுள்ளதாக பரிசோதனை அறிக்கை வந்திருக்கின்றது. இதற்கு இறந்த வைரஸ் காரணமாக இருக்கலாம். உலகில் பல நாடுகளில் குணமடைந்து வீடு திரும்பிய பலருக்கு தொற்றுள்ளதாக பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது.
அந்த நாடுகளில் வைரஸ் கல்ச்சர் முறைகள் உள்ளன. ஆனால் அந்த வசதி எங்கள் நாடுகளில் இல்லை. மேலும் கொவிட்- 19 வைரஸ் உடலில் புகுந்து கலங்களை தாக்கும். எனவே பாதிப்படைந்த கலங்கள் மீள நிலைப்படுத்த காலம் தேவை.
எனவே கலங்களில் இறந்த வைரஸ்கள் தொற்றிருப்பதாக காட்டலாம். அதற்காக மக்கள் பீதியடையவேண்டிய அவசியமில்லை. மேலும் அவர்கள் ஊடாக தொற்று பரவும் அபாயமும் இல்லை. மேலும் வளர்ச்சியடைந்த நாடுகளில்
வைரஸ் கல்ச்சர் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே நேற்று 5 பேருக்கும் தொற்று என காட்டியது இறந்த வைரஸாக இருக்கலாம் என்ற தீர்மானத்திற்கு வந்திருக்கின்றோம் என்றார்.
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

லஹிரு திரிமான்ன & குசல் மெண்டிஸ் – இன்னும் எதற்கு ?

லஹிரு திரிமான்ன & குசல் மெண்டிஸ் - இன்னும் எதற்கு ? இலங்கை ரசிகராயின் பொறுமையாகப் படியுங்கள்...! லிஹிரு திரிமான்ன இன்னும் எதற்கு என்று கேட்கும் ரசிகர்கள் இப்போதெல்லாம் இலங்கை கிரிக்கெட்டில் ஏராளம் வந்திருக்கிறார்கள், நான்...

விவசாயத்தை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஜனாதிபதி பணிப்புரை

பாரம்பரிய விவசாய முறைகளை எந்தவித தடையும் இன்றி முன்னெடுத்து செல்வதற்கான அனுமதிகளை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கிராமத்துடனான கலந்துரையாடல் செயற்றிட்டத்தின் ஆறாவது கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்,...

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீடிப்பு!

அமெரிக்காவின் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் மீதான தடைப்பட்டியலில் தொடர்ந்தும் விடுதலை புலிகள் அமைப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை தனது வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் குறித்த பட்டியலின் புதுப்பித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் விடுதலை புலிகள்...

பிரத்தியேக வகுப்புகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு!

மேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரத்தியேக வகுப்புகளை 25 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டல் நேற்றைய தினம்...

தற்போது நடைபெற்று வருகின்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடி...

Developed by: SEOGlitz