கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் நகரில் அமைந்துள்ள ஆய்வகத்தில் இருந்து பரவியது என்பதற்கு பெருமளவான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்படவில்லை என அமெரிக்க உளவுத்துறை கூறும் கருத்திற்கு தாம் முரண்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், பல சிறந்த மருத்துவ ஆய்வாளர்கள் இந்த வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என தெரிவிப்பதை தம்மால் நம்பாமல் இருக்க முடியவில்லை எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸினால் ஏற்பட்ட பாதிப்பின் அளவு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை சீனா மறைத்துள்ளதாக மைக் பொம்பியோ குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், சீனா மருந்துகளை இரகசியமாக சேமித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வூஹானில் இருக்கும் ஆய்வகங்கள் அனைத்தும் சர்வதேசத் தரத்துக்கு இணையாக இல்லாதவை எனத் தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ இதன் காரணமாகவே அங்கிருந்து வைரஸ் பரவி இருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.