- Advertisement -
கிளிநொச்சி முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 பேர் பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் இன்று சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொழும்பு யா எல மற்றும் வாழைத்தோட்டம் (கெசல்வத்த) ஆகிய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தலிற்காக அழைத்து வரப்பட்டவர்களே பரிசோதனைகள் நிறைவு பெற்று இன்று வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட தனிமைப்படுத்தல் முகாமிற்கு 59 பேர் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் பரிசோதனைகள் நிறைவுற்ற ஒரு பகுதியினர் கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்த 22 பேரே இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தனிமைப்படுத்தல் முகாமில் கடற்படையினர் தம்மை முறையாக பராமரித்ததாகவும்,தமது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யதாகவும் அவர்கள் ஊடகங்களிற்கு தெரிவித்தனர்.
மேற்படி கடற்படை முகாமில் தங்கியிருந்த மக்கள் இன்று மருத்துவ பிசோதனைகள் நிறைவுற்றதுடன் தொற்று அடையாளம் காணப்படாத நிலையில் சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக முழங்காவில் கடற்படை முகாம் பொறுப்பதிகாரி சாரக கேரத் (Commander Charaka Kerath) தெரிவித்தார்.
தொடர்ந்து குறித்த மக்கள் விசேட பேருந்து ஒன்றில் ஏற்றப்பட்டு தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
- Advertisement -