கடந்த இரண்டு மாதங்களில் தமது திணைக்களத்திற்கு சுமார் ஒன்பது கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் வீ.எஸ் பொல்வத்தகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்
குறிப்பாக ரயிலில் பயணிப்பதற்காக விநியோகிக்கப்படும் பருவச்சீட்டுகள் கடந்த இரண்டு மாதங்களாக விநியோகிக்கப்படவில்லை என்பதே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தற்போது குறைவான ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதால் போதிய வருமானம் கிடைப்பதில்லை எனவும் ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்தகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.