மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீர்மானமிக்க கலந்துரையாடலில் தேர்தல் ஆணைக்குழு…!

- Advertisement -

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விசேட சந்திப்பொன்று எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைமையகத்தில்

- Advertisement -

குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடாளுமன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து இதன் போது ஆராயப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கான திகதிகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படாமாட்டது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாடு முழுவதும் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நான்கு மாவட்டங்களுக்கு மாத்திரம்  ஊடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது மேலும் மூன்று...

அமரர் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் குறித்த முழு விபரம்!

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொட்டகலையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது உடல் குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு மலர்ச்சாலையில் இருந்து அவரது...

160 இலங்கைப் பிரஜைகள் மீண்டும் கொரியா நோக்கிப் பயணம்

கொரியாவில் பணிபுரிகின்ற நிலையில், நாடு திரும்பியிருந்த 160 இலங்கைப் பிரஜைகள் மீண்டும் கொரியா நோக்கிப் பயணித்துள்ளனர். இதற்கமைய, மியன்மார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக அவர்கள் மத்தளை மஹிந்த ராஜபக்ஸ விமான...

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைத்துவருவதற்கான புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம்...

நாட்டின் பல பகுதிகளில் 200மி.மீ மழைவீழ்ச்சி – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய,...