நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இத்னபடி நாட்டில் இன்று மாத்திரம் 29 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் 449 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் மேலும் 9 பேர்கொரோனா தொற்றில் இருந்து இன்று குணமடைந்துள்ளதாகவும் தேசிய தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனாதொற்றுக்குள்ளாகி இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளதுடன்,324 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரஅமைச்சின் தொற்று நோய்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.