மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இதுவரை 523 பேருக்கு கொரோனா தொற்று!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 63 பேர்  நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அதிக அளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

- Advertisement -

முன்னதாக, கடந்த 24ஆம் திகதி 52 பேரும், நேற்று முன்தினம் 40 பேரும் அடையாளம் காணப்பட்டமையே அதிக அளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவான சந்தர்ப்பமாக அமைந்திருந்தது.

இதன்படி, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள இருவர் நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 120 பேர் குணமடைந்துள்ளதுடன், 396 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் பேரில் 273 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 121 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 58 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 80 பேரும், இரணவில வைத்தியசாலையில் 19 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 55 பேரும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டத்திலேயே அதிக அளவிலானவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 154 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 59 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் 37 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 34 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேரும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 41 பேரும், வெலிசறை கடற்படை முகாமில் இருந்த 95 பேரும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரந்தன் – பூநகரி பிரதான வீதி பூட்டப்பட்டது!

கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி பரந்தன் பூநகரி வீதியூடாக எதிர்வரும் மூன்றாம்...

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை : அரவிந்தகுமார்!

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற போக்கை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   CAPITAL...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz