கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றமானது எந்தவொரு காரணத்திற்காகவும் மீண்டும் கூட்டப்படமாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தி கடந்த 26 ஆம் திகதி எதிர்க்கட்சினரால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தது.
குறித்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றைக்க கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னின்று செயற்ப்பட்டுவருவதோடு, மக்களின் உயிரை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் அரசியல் இலாபத்தை அடிப்படையாக கொண்டு எதிர்க்கட்சியினர் செயற்பட கூடாது எனவும் அவர் தனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.