மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விடுத்துள்ள மிகமுக்கிய கோரிக்கை…!

- Advertisement -

தங்களதும், நாட்டு மக்களினதும் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ரமழானுடைய காலத்தில் வீடுகளில் இருந்தவாறே வழிபாடுகளில் ஈடுபடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம்களின் நோன்புப் பெருநாளுக்கு முன்னரான நோன்பு நோற்கும் காலம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

வேகமாகப் பரவி வரும் கோவிட் – 19 தொற்று காரணமாக முழு உலகமும் பாரிய பிரச்சினையை எதிர் நோக்கியுள்ள சந்தர்ப்பத்திலேயே இந்த முறை நோன்பு காலம் பிறந்துள்ளது.

கொரோனா வைரஸ் என்பது பணத்தினாலோ அல்லது அதிகாரத்தினாலோ கட்டுப்படுத்த முடியாத உலகளாவிய தொற்று நிலைமையாக காணப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த தொற்று நிலைமை காரணமாக அனைத்து முஸ்லிம்களும் சமய, கலாசார, சமூக ரீதியாக பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த வருடம் ஏனைய வருடங்களை விடவும் வித்தியாசமானதாக அமைந்துள்ளதாகவும், ஆகையினால் அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதே அனைவரது பொறுப்பும் கடமையும் ஆகுமெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்மீகப் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதே ரமழான் கால நோன்பின் நம்பிக்கையாகும் என்பதினால். அந்த தன்னலமற்ற குறிக்கோளை மென்மேலும் மேம்படுத்தும் வகையில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, நாம் அனைவரும் நாடு என்ற வகையில் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியை வெற்றிகொள்ள வேண்டியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையுமில்லை: ம.வி.மு கருத்து!

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

தேசிய பால் உற்பத்தியை 70 வீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த பால் தேவையில் 40 வீதம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் மூலமும், மிகுதி 60 வீதம் இறக்குமதி செய்யப்படும்...

பொதுமக்கள் சந்திப்பு தினம் குறித்து விடுத்துள்ள கோரிக்கை!

பொதுமக்கள் சந்திப்பு தினத்தில் மக்கள் முகம்கொடுக்கும் சிக்கல்கள் குறித்து அறியத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. திங்கட்கிழமை பொதுமக்கள் சந்திப்பு தினமாக அரசாங்கத்தினால் பிரகடப்படுத்தப்பட்டுள்...

நாட்டில் சில பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரும்! எச்சரிக்கை!

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை தொடருமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்...

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பு நாளாந்தம் அதிகரிப்பு: விஜித் விஜயமுனி கருத்து

குறுகிய காலத்துக்குள் ஜனாதிபதியொருவர் மக்களின் பாரிய அதிருப்திக்கு உள்ளான முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். மெதிரிகிரிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய...

Developed by: SEOGlitz