மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு..!

- Advertisement -

வெலிசறை கடற்படை முகாமில் பணிபுரியும் மேலும் 30 உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே குறித்த முகாமில் பணிபுரியும் 30 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது மேலும் 30 பேர் இன்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அத்துடன், தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்வைக்கப்பட்டிருந்த மேலும் ஆறு பேர் இன்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.

கொழும்பு 12 , பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த ஆறு பேருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்போது நாட்டில் கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 109 பேர் குணமடைந்துள்ளதுடன், 298 பேர் வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும், ஏழு பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 130 பேரும், களுத்தறை மாவட்டத்தில் 58 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொலன்னறுவை லங்காபுர பகுதியில், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிந்த பலர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, 11 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் மட்டக்களப்பிலுள்ள இரண்டு தனிமைப்படுத்தல் நிலைங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை லங்காபுர பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதையடுத்து, லங்காபுர பிரதேச செயலகத்திற்குற்பட்ட 12 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிளாக அறிவிக்கப்பட்டன.

பொலன்னறுவை லங்காபுர பகுதியைச் சேர்ந்த குறித்த கடற்படை வீரர், வெலிசறை கடற்படை முகாமிலிருந்த நிலையிலேயே, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார்

இதற்கமைய, லங்காபுர பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆறாயிரத்து 60 குடும்பங்களைச் சேர்ந்த, 22 ஆயிரத்து 380 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே, குறித்த கடற்படை வீரருடன் தொடர்பினை வைத்திருந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் இன்றைய தினம் மட்டக்களப்பிலுள்ள இரண்டு தனிமைப்படுத்தல் நிலைங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மீகலாவை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 34 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் 16 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப’ பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிசறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பு வைத்திருந்தந்தமை அடையாளங்காணப்பட்டுள்ள நிலையிலேயே இவர்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் 30 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பினை வைத்திருந்த அனைவரையும் சுயதனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுமார் நான்காயிரம் பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கில் கொரோனா தொற்றுக் குறித்த தற்போதைய நிலைமைக்குறித்து யாழ்ப்போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்திய மூர்த்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு..! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி – சுதந்திரக் கட்சி

ஜனாதிபதியுடன் சுதந்திரக் கட்சியினால் இன்று முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். CAPITAL NEWS · Mahintha

அரிசி விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் 50 முதல் 75 ரூபாவினால் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரிசியை அதிக விலைக்கு...

டெல்டா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாம் – சுகாதார தரப்பு வலியுறுத்தல்

டெல்டா வைரஸ் திரிபு நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய  நிபுணர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைகையில் அவர் இவ்வாறு...

டயகம சிறுமி உயிரிழந்த விவகாரம் – ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளார்

டயகம சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் இந்த...

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் திகதியில் மாற்றம்.

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை நடாத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு...

Developed by: SEOGlitz