அமெரிக்காவின் முன்னாள் ஒலிம்பிக் அணியின் ஜிம்னாஸ்டிக் பயிற்றுவிப்பாளர் Maggie Haney ஐ அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அமைப்பு இடை நீக்கம் செய்துள்ளது.
இதற்கமைய, அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அமைப்பினால் ஜிம்னாஸ்டிக் பயிற்றுவிப்பாளர் Maggie Haney 8 வருடங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் ஈடுபடுபவர்களை வாய்மொழி மூலமாகவும் உள ரீதியாகவும் துஷ்பிரியோகம் செய்த காரணத்திற்காக அவர் இவ்வாறு இடைநீக்கப்பட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற லாரி ஹெர்னாண்டஸின் (Laurie Hernandez) குற்றச்சாட்டுக்கிணங்க மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீன விசாரணைக் குழு அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு அமைய விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு தொடர்பான விசாரணைக் குழுவினால் Maggie Haney இன் வழக்கு தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.