கொரோனா தொற்று ஏற்ப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ், கொடிகாமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் கண்கானிப்புக்கு உட்பட்டுத்தப்பட்டிருந்த நிலையில், பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
தற்போதைய நிலையில் அவரது உடல் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.