விவசாய உற்பத்திகளின் விற்பனையின் போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் ஆராயப்பட்டுள்ளது.
இதன் போது விவசாயிகள், நுகர்வோர் மற்றும் விநியோகஸ்தர்களின் செயற்பாட்டில் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவது தொடர்பிலேயே ஆராயப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் சமல் ராஜபக்ஸ மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மையத்தின் அதிகாரிகளும் இதன் போது கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பு இன்று மதியம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
விவசாயம் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்தவும் நுகர்வோருக்கான விநியோகத்தை மேற்கொள்ளவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இதன் மூலமாக விவசாயிகளின் விளைச்சலுக்கு நியாயமான விலையை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் நம்பிக்கை வௌியிடப்பட்டுள்ளது.