மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் முக்கிய மகப்பேற்று வைத்தியசாலையில் கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா..!

- Advertisement -

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சு இன்று மாலை விடுத்துள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், இலங்கையில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட தினமான இன்றைய தினம் பதிவாகியுள்ளது

இதற்கமைய, இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் மேலும் 30 பேர் இன்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேலும் ஐந்து கடற்படை உத்தியோகத்தர்கள்,  தமது ஊர்களுக்கு சென்றிருந்த வேளையில், பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, இரத்தினபுரி  , குருநாகல், பொல்கஹவெல, பதுளை மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதிகளில் இருந்த நிலையிலேயே, அவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொழும்பு 12 , பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 11 பேருக்கும் இன்றைய தினம் கொரோனா தொற்று ஏற்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

மேலும்,  வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்று வந்த மருதானையைச் சேர்ந்த கர்ப்பிணப் பெண்ணொருவரும் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதற்கமைய, குறித்த பெண்,  டி சொய்சா மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

பெருமளவிலான கழிவுத் தேயிலை கைப்பற்றல்!

எல்பிட்டிய பிரதேசத்தில் 5 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. ரத்கம பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. காலி - எல்பிட்டிய இணிகொடவல பிரதேசத்தில்...

Developed by: SEOGlitz