மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலும் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – சுகாதார அமைச்சு தகவல்…!

- Advertisement -

நாட்டில் இன்று மாத்திரம் 13 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் 433 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

மேலும் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் - சுகாதார அமைச்சு தகவல்...! 1

அத்துடன் மேலும் 7 பேர்கொரோனா தொற்றில் இருந்து இன்று குணமடைந்துள்ளதாகவும் தேசிய தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனாதொற்றுக்குள்ளாகி இதுவரை 116 பேர் குணமடைந்துள்ளதுடன், 307  பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரஅமைச்சின் தொற்று நோய்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஒரேநாளில்அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட தினமாக நேற்றைய தினம் பதிவாகிருந்தது.

நேற்றைய தினம் 30 கடற்படைவீரர்கள் உள்ளடங்களாக 52 பேர் மொத்தமாக அடையாளம் காணப்பட்டமை  சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன், கொரோனா தொற்றுகுறித்த சந்தேகத்தின் பேரில் 247 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 103 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 43 பேரும், கொழும்புகிழக்கு ஆதார வைத்தியசாலையில் 77 பேரும், இரணவில வைத்தியசாலையில் 19 பேரும், காத்தான்குடிஆதார வைத்தியசாலையில் 55 பேரும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மற்றும்களுத்துறை மாவட்டத்திலேயே அதிக அளவிலானவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில்142 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 59 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 33 பேரும்,யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேரும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 38 பேரும்,வெலிசறை கடற்படை முகாமில் இருந்த 58 பேரும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் - சுகாதார அமைச்சு தகவல்...! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடுதிரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில்...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

இந்த வருடத்துக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அனுமதிச் சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டு விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அனுமதிச் சீட்டுகள் ஏற்கனவே...

மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்க வேண்டும் : ஜனாதிபதி தெரிவிப்பு!

ஒவ்வொரு பாடசாலைக்கும் நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பிள்ளைகளின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை பராமரிக்க முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின்...

Developed by: SEOGlitz