மெய்ப்பொருள் காண்பது அறிவு

இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் குறித்து வெளியான தகவல்..!

- Advertisement -

நாட்டில் இன்று மாத்திரம் 20 பேர் புதிதாக  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், இன்றைய தினம் அடையாளங் காணப்பட்டவர்களில் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு பண்டாரநாயக்க பகுதியைச் சேர்ந்த ஏழு பேரும் உள்ளடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

மேலும், பண்டாரநாயக்க மாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய மாணவர் ஒருவரும், வெலிசறை கடற்படை பகுதியைச் சேர்ந்த நான்கு பேரும் அடையாளங் காணப்பட்டுள்ள அதேவேளை, மற்றுமொரு கடற்படை வீரர் மொனராகலைப் பகுதியில் வைத்தும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலும் 7 பேர்கொரோனா தொற்றில் இருந்து இன்று குணமடைந்துள்ளதாகவும் தேசிய தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனாதொற்றுக்குள்ளாகி இதுவரை 116 பேர் குணமடைந்துள்ளதுடன்,

305  பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரஅமைச்சின் தொற்று நோய்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஒரேநாளில்அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட தினமாக நேற்றைய தினம் பதிவாகிருந்தது.

நேற்றைய தினம் 30 கடற்படைவீரர்கள் உள்ளடங்களாக 52 பேர் மொத்தமாக அடையாளம் காணப்பட்டமை  சுட்டிக்காட்டத்தக்கது.  அத்துடன், கொரோனா தொற்றுகுறித்த சந்தேகத்தின் பேரில் 247 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 103 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 43 பேரும், கொழும்புகிழக்கு ஆதார வைத்தியசாலையில் 77 பேரும், இரணவில வைத்தியசாலையில் 19 பேரும், காத்தான்குடிஆதார வைத்தியசாலையில் 55 பேரும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மற்றும்களுத்துறை மாவட்டத்திலேயே அதிக அளவிலானவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில்142 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 59 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும்,

கம்பஹா மாவட்டத்தில் 33 பேரும்,யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேரும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 38 பேரும்,வெலிசறை கடற்படை முகாமில் இருந்த 58 பேரும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் பொலிஸாரினால் சேகரிப்பு!

வடக்கு - கிழக்கின் சில பகுதிகளில் நேற்றையதினம் ஹர்த்தால் இடம்பெற்ற நிலையில் வவுனியாவில் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளன. இதற்கமைய, பொலிசார் பாடசாலை அதிபர்களை தொடர்பு கொண்டு, பாடசாலைக்கு சமூகமளித்த...

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

Developed by: SEOGlitz