மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவில் 50 இலட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை – சர்வதேச செய்திகளின் தொகுப்பு..!

- Advertisement -

அமெரிக்காவில் இதுவரை 5 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 50 இலட்சத்து 37 ஆயிரத்து 473 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனைகள் அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இதன் அடிப்படையில், 9 இலட்சத்து 25 ஆயிரத்து 758 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்காவில் இதுவரை 52 ஆயிரத்து 217 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிங்கப்பூரில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 618 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் இதுவரையான காலப்பகுதியில் 12 ஆயிரத்து 693 பேர் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 956 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுடன், 12 கொரோனா தொற்று உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, பெல்ஜியத்தில் கொரோனா தொற்று காரணமாக இன்று மாத்திரம், 238 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து, பெல்ஜியத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 917 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், பெல்ஜியத்தில் இன்று மாத்திரம் ஆயிரத்து 32 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 325 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஆவது திருத்தத்திற்கு எதிராக 6 மனுக்கள் தாக்கல்!

நாடாளுமன்றித்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த  சட்டமூல வரைபிற்கு எதிராக மேலும் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த, மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, 20  ஆவது அரசியலமைப்பு திருத்த...

20 ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்களை ஆராயும் குழு நியமனம்!

20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த குழு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புவகேன அலுவிகாரே,...

Glasgow பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி…

ஸ்கொட்லாந்தின் Glasgow பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் 600 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் குறித்த மாணவர்களுள் 172 பேருக்கு...

உங்களுக்கு மாற்று யாரும் கிடையாது- டி. இமான்….

தமிழ் சினிமாவின் பாடகர் டி.இமான் "நாங்கள் அனைவரும் உங்களை இழக்கின்றோம்" என தனது ஆழ்ந்த இரக்கங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். We Miss You SPB Sir.#Annaatthe#RIPSPB pic.twitter.com/08gNLOsUsO — D.IMMAN (@immancomposer) September...

எனக்கு முன்னுதாரணமாக இருந்தவர் SPB – ஹரிகரன் இரங்கல்.

It is so tragic, the most unfortunate happening. SPB sir was a humble & helpful human being. He was one of the most phenomenal...

Developed by: SEOGlitz