மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடளாவிய ரீதியில் இன்று விசேட ஊரடங்கு சட்டம் அமுல்

- Advertisement -

நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

 

- Advertisement -

விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை முகாம்களுக்கு மீண்டும் அழைத்துவருவதற்காக இன்று நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 

முன்னதாக, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் இன்று காலை ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

எனினும், விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை முகாம்களுக்கு மீண்டும் அழைத்துவருவதற்காக அந்த ஊரடங்கு நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

இதன்படி, இன்று நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் நாளை காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் பின்னர், குறித்த மாவட்டங்களில் மே மாதம் முதலாம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மட்டுமே ஊரடங்கு அமுலில் இருக்கும்.

 

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தாலும், அரச மற்றும் தனியார் துறையினரின் செயற்பாடுகளை மே மாதம் 4ஆம் திகதி ஆரம்பித்து செயற்படுத்தும் வகையில் உரிய சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன.

 

திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், தனியார் துறையினரின் தொழிற்சாலைகள், கட்டுமானத்துறை, சேவை நிலையங்கள், மரக்கறி, மீன் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை நடத்திச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், தனியார் துறை நிறுவனங்களை திறக்கும் நேரமாக காலை 10 மணி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

 

அரச மற்றும் தனியார் துறையினரின் நிறுவன பிரதானிகள், தமது நிறுவனங்களை மே 4ஆம் திகதி முதல் நடத்திச் செல்லும் முறை குறித்து இந்த வாரம் தீர்மானிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் தமது ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை மாத்திரமே சேவைக்கு அழைக்க முடியும்.

 

மேலும், தமது நிறுவனத்தை நடத்திச் செல்ல அவசியமான குறைந்த அளவான ஊழியர்களை மட்டுமே அழைக்க வேண்டியது நிறுவன பிரதானிகளின் கடடையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவைக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் வீட்டில் இருந்து தமது கடமைகளை முன்னெடுக்க வேண்டும்.

 

மேலும், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் வீதிகளில் அனாவசியமாக நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஆகியவற்றில் பணிக்கு செல்வோர் மட்டுமே பயணிக்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 

அத்துடன், சேவைகளுக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியம் காணப்படுபவர்கள் தவிர்ந்த ஏனையோர் வீடுகளிலேயே இருப்பது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசியமான உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொள்வனவு செய்ய மாத்திரமே மக்கள் வெளியில் செல்ல முடியும் என்பதுடன், அவ்வாறான தேவைகளுக்காக தமது பிரதேசத்தில் உள்ள நடந்து செல்லும் தூரத்தில் உள்ள விற்பனை நிலையங்களை மாத்திரமே தெரிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வீட்டில் இருந்து வெளியில் செல்ல தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் படி மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.

 

இதன்படி, 1 அல்லது 2 ஆகிய இலக்கங்களில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும்.

 

அத்துடன், 3 அல்லது 4 ஆகிய இலக்கங்களில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் செவ்வாய்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும்.

 

அத்துடன், 5 அல்லது 6 ஆகிய இலக்கங்களில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் புதன்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும்.

 

அத்துடன், 7 அல்லது 8 ஆகிய இலக்கங்களில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் வியாழக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும்.

 

அத்துடன், 9 அல்லது 0 ஆகிய இலக்கங்களில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz