மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர்களுக்கு மதிப்பளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை

- Advertisement -

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது பாதிக்கப்பட்ட நபர்களின்  தனிநபர் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்குமாறு ஊடகங்களிடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் தகவல்கள் மற்றும் குறித்த பிரதேசங்கள் தொடர்பான காணொளிகளை ஒளிபரப்பும் போது அவர்களின் தனியுரிமையை பாதுகாக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதில் ஊடகவியலாளர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் நோயாளிகளின் தனியுரிமையைப் பாதுகாப்பது அவர்களை பரிசோதனையில் ஈடுபட ஊக்குவிக்கும் என்பதை ஊடகங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், விசேடமாக, செய்திகளை விரைவாக கொண்டு சேர்க்கும் நோக்கில் ஊடக விதி மீறல்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறான செயல்பாடுகள் கடமையில் உள்ள சுகாதார அதிகாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எனவும், அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை சந்தேகத்திற்குரிய கொரோனா தொற்றாளர்களை கண்காணிப்பதில் சுகாதார அதிகாரிகளுடன் வருவதைத் தவிர்க்குமாறும் ஊடக நிறுவனங்களை, பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா -மூன்றாம் நாள் ஆட்ட விபரம்!

பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது. இந்த போட்டியில், தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி, சற்று முன்னர்...

நாடாளுமன்றில் வாராந்தம் PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் எழுமாறாக முன்னெடுக்கப்படவுள்ள  பி சி ஆர் பரிசோதனைகளில் பங்கேற்குமாறு  அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார  சேவைகள் பணிப்பாளரின் அனுமதியுடன்  வாரத்துக்கு  ஒரு தடவை குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற  படைக்கல...

நாட்டின் 21 மாவட்டங்களில் 24 மணிநேரத்தில் 772 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டின் 21 மாவட்டங்களில  கடந்த 24 மணிநேரத்தில் 772 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவற்றுள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய...

பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் அவதானம்

அரச பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை   இந்த ஆண்டில் பல்கலைக்கழகங்களில் மேலதிகமாக 10 ஆயிரம்  பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான  அறிவிப்பு...

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று முதல் 12 இடங்களில் ரெப்பிட் என்டிஜன் பரிசோதனை

மேல் மாகாணத்தில் இருந்து  வேறு மாகாணங்களுக்கு பிரவேசிக்கும் 12  இடங்களில் ரெப்பிட்  என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் இன்று முதல் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக   பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை  மேல்...

Developed by: SEOGlitz