கியூபாவிலிருந்து மருத்துவ பணியாளர்கள் ஆயிரத்து 200 பேர், 22 நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
கியூபாவிடம் உதவி கோரியிருந்த நாடுகளுக்கே இவ்வாறு மருத்துவ பணியாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், அண்மையில் தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 216 மருத்துவர்கள் கியூபாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதேவேளை, தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கும், சுகாதார பாதுகாப்புக்கும், கியூபா புகழ்பெற்ற நாடு என்பது குறிப்பிடத்தக்கது.