மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராணுவ முகாம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி செயலணி

- Advertisement -

இராணுவ முகாம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண ஆளுனர் MARSHAL OF THE AIR FORCE ரொஷான் குணதிலக்க தலைமையில் இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

- Advertisement -

முப்படையினரின் முகாம்களுக்குள் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராயும் விசேட சந்திப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பாதுகாப்பு படைகளின் ஓய்வு பெற்ற  பிரதானிகள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதனையடுத்தே, இராணுவ முகாம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாதுகாப்புப் படை முகாம்களில் முழுமையான சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களைக் கொண்டுவந்து, அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு,  குறித்த ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

மக்களைப் போன்று முப்படை வீரர்களையும் கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய வகையில் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் முப்படையினருக்கு உள்ள நிலையில், அவர்கள் குறித்து விசேட கவனஞ் செலுத்தப்பட வேண்டும் என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடளாவிய ரீதியில் மக்கள் அஞ்சலி – சர்வமத வழிபாடுகள் முன்னெடுப்பு..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகளுக்கு தராதரமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நாமல் ராஜபக்ஸ உறுதி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் தற்போது உள்ள சட்டங்களுக்கு அமைவாக...

ஆண்டுகள் இரண்டு கடந்தும் நீதிக்காய் இரந்து நிற்கும் மக்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

Developed by: SEOGlitz