மெய்ப்பொருள் காண்பது அறிவு

மொத்த விற்பனைக்காக புறக்கோட்டை மெனிங் சந்தை நடவடிக்கைகள் ஆரம்பம்

- Advertisement -

புறக்கோட்டை மெனிங் சந்தை நாளை மறுதினம் முதல் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் திறக்கப்படவுள்ளது.

புறக்கோட்டை மெனிங் சந்தை சங்கத்தின் தலைவர் நிமல் அத்தநாயக்கவை சுட்டிக்காட்டி  அரசாங்கத் தகவல் திணைக்களம்  இதனைத் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதற்கமைய, ஞாயிற்றுக் கிழமை தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் காலை 04 மணி முதல் பிற்பகல் 01 மணி வரை புறக்கோட்டை மெனிங் சந்தையை திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, ஞாயிற்றுக் கிழமைகளில் புறக்கோட்டை மெனிங் சந்தை பகுதியில் கிருமி  அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், புறக்கோட்டை மெனிங் சந்தைக்கு வருகைத்தருபவர்கள் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள அறிவுரைகளை கடைபிடிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னதாக மூடப்பட்ட நாரஹேன்பிட்டி வர்த்தக மத்திய நிலையம் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டது

கிருமி அகற்றும் நடவடிக்கைகளுக்காக நேற்றைய தினம் நாரஹேன்பிட்டி வர்த்தக மத்திய நிலையம் மூடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரந்தன் – பூநகரி பிரதான வீதி பூட்டப்பட்டது!

கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி பரந்தன் பூநகரி வீதியூடாக எதிர்வரும் மூன்றாம்...

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை : அரவிந்தகுமார்!

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற போக்கை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   CAPITAL...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz