மெய்ப்பொருள் காண்பது அறிவு

குருநாகல் வைத்தியசாலை குறித்து வெளியான தகவல்!

- Advertisement -

குருநாகல் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்புடைய 326 பேர் சுயதனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 13 பேருக்கு கொரொன தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் கடற்படை உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்பு துறைசார்ந்தவர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில் விடுமுறை நிமித்தம் நாவலப்பிட்டி பகுதிக்கு சென்றிருந்த கடற்படை வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் நாவலப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வாகனம் ஊடாக வெலிசறை கடற்படை முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியா சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு கொரோனோ தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் பணியாற்றும் திருகோணமலையை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவருக்கு நேற்று கொரொனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த உத்தியோகத்தருக்கு கடந்த இரு தினங்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் இதனையடுத்து குறித்த நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டதுடன் அவரின் இரத்த மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று அவரது பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதுடன் அவருக்கு கொரோனோ தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

பெருமளவிலான கழிவுத் தேயிலை கைப்பற்றல்!

எல்பிட்டிய பிரதேசத்தில் 5 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. ரத்கம பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. காலி - எல்பிட்டிய இணிகொடவல பிரதேசத்தில்...

தற்போதைய அரசாங்கம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் கருத்து!

மக்களை கேலிக்கு உட்படுத்தும் அரசாங்கமொன்றே தற்போது உருவாகியுள்ளதாக புத்தளம் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவிக்கின்றார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். CAPITAL...

Developed by: SEOGlitz