மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளியாகும் சாதாரணதர பரீட்சைப் பெறுபேறு – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

- Advertisement -

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளை அடுத்த வாரத்திற்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான  இறுதிக் கட்டப் பணிகள் இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பரீட்சை பெறுபேறுகள் பாடசாலைகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பெறுபேறுகளை இணையதளத்தின் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பெறுபேற்று பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கு வலய மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு கடவுச்சொல் மற்றும் பயனருக்கான பெயர் ஆகியன வழங்கப்படவுள்ளது.

அத்துடன்,  www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு சென்று தமது பெறுபேறுகளை பார்வையிட முடியும் எனவும், தற்காலிகமான பெறுபேற்று பத்திரத்தை பெற்றுக் கொள்ளமுடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடளாவிய ரீதியில் மக்கள் அஞ்சலி – சர்வமத வழிபாடுகள் முன்னெடுப்பு..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகளுக்கு தராதரமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நாமல் ராஜபக்ஸ உறுதி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் தற்போது உள்ள சட்டங்களுக்கு அமைவாக...

ஆண்டுகள் இரண்டு கடந்தும் நீதிக்காய் இரந்து நிற்கும் மக்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

Developed by: SEOGlitz