மெய்ப்பொருள் காண்பது அறிவு

400 கடற்படை வீரர்களுக்கு பரிசோதனை – கொரோனா இன்றைய நிலவரம்…!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று காலை அடையளம் காணப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

- Advertisement -

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் 7 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் தேசிய தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 116 பேர் குணமடைந்துள்ளதுடன், 294  பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட தினமாக நேற்றைய தினம் பதிவாகிருந்தது.

நேற்றைய தினம் 30 கடற்படை வீரர்கள் உள்ளடங்களாக 49 பேர் மொத்தமாக அடையாளம் காணப்பட்டமை  சுட்டிக்காட்டத்தக்கது.

குறிப்பாக, வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றைய தினம் உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 60 ற்கும் மேற்பட்டதாக உயர்வடைந்தது.

இதில், இரத்தினபுரி, குருநாகல், பொல்கஹவெல, பதுளை மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதிகளில் இருந்த கடற்படை வீரர்களும் அடையாளங் காணப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, மேலும் 400 கடற்படை வீரர்களுக்கு இன்றைய தினம் PCR பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுடைய வீரர்களுடன் தொடர்புடைய 400 வீரர்களுக்கே இவ்வாறு பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், கடற்படை வீரர்களுக்கு பயணக் கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், வெலிசறை   கடற்படை முகாமில் இருந்து விடுமுறையில் சென்றிருந்த கடற்படை உறுப்பினர்கள் நால்வர் இரத்தினபுரி வைத்தியசாலையில்  PCR  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வெலிசறை கடற்படை முகாம்  உறுப்பினர்கள்  நால்வர்  கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் விடுமுறை  நிமித்தம் பலாங்கொடை பகுதிக்கு சென்றிருந்ததாகவும்  இந்த நிலையில் அவர்களுள் மூவர் PCR  பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பலாங்கொடை பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மற்றைய நபர் சுயதனிமைப்படுத்தல் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த கடற்படை உறுப்பினர்களுடன் தொடர்புடைய மேலும் 30 பேர் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த...

சில மாகாணங்களில் பலத்த மழை – சற்று முன்னர் வெளியான அறிக்கை…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

சுற்றுலா இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன…!

அனைத்து சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் கோர விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு...

Developed by: SEOGlitz