மெய்ப்பொருள் காண்பது அறிவு

163 பேருடன் கட்டுநாயக்கவில் தரையிறங்கிய மற்றுமொரு விமானம்…!

- Advertisement -

உயர்க்கல்விக்காக சென்று இந்தியாவின் மும்பாய் நகரில் சிக்கியிருந்த 163 இலங்கை மாணவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL -144 விமானத்தின் ஊடாக இன்று பிற்பகல் 2.35 அளவில், அவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 23 ஆம் திகதியும், இந்தியாவிலிருந்து 101 மாணவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

மேலும், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் இருந்தும், ஏற்கனவே மாணவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

அத்துடன், ஏனைய நாடுகளில் உள்ள இலங்கை மாணவர்களையும் நாட்டுக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பாடும் நிலாவின் மறைவிற்காக கடற்கரையில் வடிவமைத்த ஓவியம்!

புகழ்பெற்ற பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் புரி கடற்கரையில் எஸ்.பி.பி யின் படத்தை வடிவமைத்துள்ளார். இச் சிற்பத்தை சர்வதேச மணற்சிலை வடிவமைப்பாளர் ஒருவர் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tribute to legendary...

எஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல்  அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம்  தாமரைப்பாக்கத்தில் உள்ள  அவரது பண்ணை இல்லம் பகுதியில்   ராணுவ  மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன்  72  குண்டுகள்...

எஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்!

இளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.  

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கு எச்சரிக்கை!

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட ஆயிரத்து 200 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பஸ் முன்னுரிமை...

எஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகள் ஆரம்பம்!

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய விதிமுறைகளுக்கமைய இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுவருகின்றன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் புதல்வர் எஸ்.பி.சரண் தனது தந்தையாருக்கு இறுதிக்கிரியைகள் சம்பிரதாயங்களை முன்னெடுத்துள்ளார்.

Developed by: SEOGlitz