வெலிசர கடற்படைத் தளத்திலுள்ள கடற்படை வீரர்களுக்கான பி.சி.ஆர் பறிசோதனை விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை தளம் முழுமையாக பூட்டப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தலைமை வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்தார்.
நேற்று (ஏப்ரல் 24) மேலும் 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சோதனைகளில் தெரியவந்த நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது,
இந்த நிலையில் நாளொன்றுக்கு 400 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள கடற்படை, நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை ஏற்கனவே உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதால், பொதுமக்கள தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என வைஸ் அட்மிரல் டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
கடற்படை வீரர்களை தங்கள் தலத்தில் தனிமைப்படுத்தி வைப்பதற்கும், விடுமுறையில் சென்ற வீரர்களை மீண்டும் வெளிசரை கடற்படை தளத்திற்கு அழைத்துவருவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
4,000 கடற்படைப் வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் (194 திருமணமான குடியிருப்புகள் வெலிசரா கடற்படை வளாகத்தில் அமைந்துள்ளன) முகாமுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், விடுமுறையில் சென்ற கடற்படை வீரர்களுடன் தொடர்புடையவர்களையும் கடற்படை முகாமிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தலைமை வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.