புதிய நாடாளுமன்றத்தை கூட்டுவதை விடுத்து தமக்கு பழைய நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மகாசங்கத்தினரை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் தமக்கு பெரும் ஆணையொன்றினை வழங்கியுள்ள நிலையில் அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற பலமானதெரு நாடாளுமன்றத்தின் தேவை இருப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.
இந்த நிலையில் பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி நாட்டை குழப்பமான நிலைக்கு உள்ளாக்க வேண்டியதில்லை எனவும் பழைய நாடாளுமன்றத்தை கூட்டக்கூடாது என மகாசங்கத்தினர் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது,
அத்துடன் முன்னர் இருந்த நாடாளுமன்றமே நாட்டின் தற்போதைய நிதிப் பிரச்சினைக்கு பொறுப்புக்கூறவேண்டும் என மல்வத்த்து பீடத்தின் அநுநாயக தேரர் நியங்கொட விஜிதசிறி தேரர் குறிப்பிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டுகின்றது.
மேலும் இம்முறை வெசாக் பண்டிகையை இலத்திரனியல் ஊடகங்களை பயன்படுத்தி வீட்டிலிருந்தவாறு கொண்டாடுவதற்கு தேவையான பின்புலத்தை ஏற்படுத்துவதன் அவசியத்தையும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.