மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஶ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!

- Advertisement -

உயர்க் கல்விக்காக சென்று நாட்டுக்கு வர முடியாத நிலையில் நேபாளத்தில் சிக்கியிருந்த 76 மாணவர்கள் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, ஶ்ரீ லங்கன் விமானசேவைக்கு சொந்தமான UL- 1425 என்ற விமானத்தின் ஊடாக இன்று மதியம் 3.30 அளவில், அவர்கள் நாட்டை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்துயாளர் தெரிவித்தார்.

- Advertisement -

இதன்படி, அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் உள்ள 93 பேரை அழைத்து வருவதற்காக குறித்த விமானம்,  இன்று காலை  8 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து  நேபாளத்தின்  காத்மண்டு நோக்கி பயணித்தது.

இதன்போது  விமானிகள் உட்பட எட்டு பேர் பணியாளர்கள் பயணித்திருந்தனர்.

எனினும், 93 மாணவர்களில் 17 பேர் தயார் நிலையில் இருக்காத காரணத்தினால் 76 பேர் மாத்திரமே அழைத்துவரப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளில் தங்கியுள்ள மேலும் சில மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இந்தியாவின் பெங்களுர், மும்பை நகர், கோயம்புத்தூர், மற்றும் பங்களாதேஷ் டாக்கா நகர் ஆகிய பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்கு விசேட விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவையின் ஊடக முகாமையாளர் தீபால் பெரோரா குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் குறித்த நாடுகளில் உள்ள விமான சேவைகள் அதிகாரிகள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயர்கல்வி நிமித்தம் இந்தியாவுக்கு சென்றிருந்த 101 இலங்கை மாணவர்கள் நேற்று விசேட விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

மேலும், அண்மையில் பாகிஸ்தானில் சிக்கியிருந்த 106 மாணவர்களும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தொழில் பெற்றுத்தருவதாக மோசடி – நீதி அமைச்சர் விடுத்துள்ள அதிரடி பணிப்புரை..!

தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்யுமாறு நீதி  அமைச்சர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். நீதி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியினால் நியமனம்..!

நான்கு நாடுகளுக்கான புதிய தூதுவர்கள்  இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று முற்பகல் புதிய தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர். கொரியக்...

புதிய வரவுசெலவு திட்டம் – அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது..!

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் நவம்பர்...

கல்விசார் சமூகத்திற்கு அங்கஜன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..!

நாட்டில் எதிர்காலத்தில் கல்விசார் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார். கொழும்பு இந்து கல்லூரியில் இன்று...

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராஜியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில்...

Developed by: SEOGlitz