மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவின் பொருளாதார தாக்கம்?

- Advertisement -

கொரோனா வைரஸ் பரவுவதைக் குறைக்க உலகளாவிய தலைவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் பயணத் தடைகள் மற்றும் வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி உள்ளனர்,

அதேவேளை சுகாதார துறைக்கான செலவை அதிகரிப்பு செய்யதுள்ளன. கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து யூரோப் மற்றும் அமெரிக்காவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

தனது மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பது மற்றும் உறுதிசெய்வது ஒரு நாட்டின் முக்கிய நோக்கம் ஆகும், ஆனாலும் பொருளாதாரத்தையும் கவனிக்க வென்றும். வரலாற்றில் இது மிக மோசமான பொருளாதார ரீதியான அதிர்ச்சி என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இலங்கை பொருளாதாரத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த நூற்றாண்டில் பொருளாதாரங்கள் அதிவேகமாக வளர்த்துள்ளனர், மற்றும் ஒன்றுக்கு ஒன்று சார்ந்துகொண்டனர், சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரித்தது.

சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரித்தது. இதன் விளைவாக, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற பொருளாதாரங்களில் குழப்பம் ஏற்படும் நிலையில், உலகின் அனைத்து பகுதிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த நேரத்தில் ஆடை உற்பத்தி விவசாயம் சுற்றுலா சில்லறை மற்றும் நுகர்வோர் துறை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இது தவிர, இலங்கை மக்கள் சம்பளக் குறைப்பு மற்றும் வேலையின்மை ஆகியவற்றின் விளைவுகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி

அனைத்து மாவட்டங்களிலும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் சீனாவிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் தற்காலிகமாக இடைநிறுத்தியதின் காரணமாக மற்றும் மனிதவளமின்மை காரணமாக உற்பத்தியை நிறுத்த வேண்டி இருந்தது. இலங்கையின் உற்பத்தித் துறை பெரும் தாக்கத்தை சந்தித்தது.

எவ்வாறாயினும், அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்றுமதி உள்ளீடுகளுக்கான தடையை நீக்கியுள்ளது அரசாங்கம். ஆடை உற்பத்தி துறை, நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஆனால் இப்போது ஆடைகளுக்கான தேவை மறைந்துவிட்டது.

ஒரு தற்காலிக பொறிமுறையாக, ஆடைத் துறையில் உள்ள தலைவர்கள் நாட்டில் முகமூடிகள் மற்றும் கையுறைகள் போன்ற தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய தங்கள் உற்பத்தி சாலைகளை பயன்படுத்த முடிவு எடுத்தனர்.

உணவு மற்றும் விவசாயம்

பயன்படுத்தப்படாத நிலத்தில் காய்கறிகளை பயிரிடுவதை ஊக்குவிப்பதற்காக, அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு இறக்குமதியை தடை செய்வதன் மூலம் விவசாயத் துறையின் தற்போதைய முக்கியத்துவத்தை அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது.

ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் உணவு மற்றும் விவசாய சேவைகளுக்கு அரசாங்கத்தின் அனுமதி தொடர்ந்தாலும், புதிய உணவின் ஒட்டுமொத்த சில்லறை விற்பனை முடங்கியுள்ளது, பல விவசாய பொருட்களின் அழிவுக்கு இது காரணமாகி உள்ளது. ஊரடங்கு ஆதரவு தளர்த்தப்படும் முன்பே மரக்கறிகள் மற்றும் பழவகைகள் பழுதாகி விடுகின்றன.

இளவங்கப்பட்டை, மிளகு மற்றும் ஏலக்காய் போன்ற பொருட்களுக்கு ஒரு சந்தையை உருவாக்குமாறு ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் ஏற்றுமதியாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

சுற்றுலா

இலங்கை சுற்றுலாத் துறை 2019 இன் ஈஸ்டர் குண்டு தாக்குதல்களிலிருந்து மீண்டு வந்துகொண்டு இருந்த வேளையில், கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகளாவிய ரீதியில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முதல் மூன்று மதங்களை எடுத்துக்கொண்டால், சென்ற வருடத்தை விட 30% வீழ்ச்சியை சுற்றுலா துறை கண்டுள்ளது .

இலங்கையில் COVID-19 இன் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தொற்றுக்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்தை திருப்பி உள்ளது, இதன் விளைவாக இலங்கையின் சுற்றுலாத் துறையை பாராட்டும் வகையில், யூரோ 3.5 மில்லியன் தொகையை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது.

சம்பளக் குறைப்பு மற்றும் வேலையின்மை

இலங்கையின் பொருளாதாரம் சந்திக்கவுள்ள மற்றொரு சிக்கல், ஊரடங்கு உத்தரவுகளால் வரக்கூடிய அதிக வேலையின்மை விகிதம், நாட்டின் ஏற்றுமதிக்கான உலகளாவிய தேவை குறைவு மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து மூலப்பொருட்களை வாங்குவதில் தாமதம்.

COVID-19 இன் விளைவாக வருமானத்தை ஈட்ட முடியாத சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME கள்), சம்பள குறைப்புகளில் ஈடுபட வாய்ப்பு இருக்கின்றது. அதே நேரம் வேளையில் இருந்து சிலரை நிறுத்தவும் வாய்ப்பு உள்ளது. இலங்கையில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தி, வாழ்க்கை இயல்பு நிலைக்கு வந்தவுடன், இலங்கையின் தொழிலாளர் ஒரு பகுதியினர் இலங்கை முழுவதும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறைந்த ஊதியத்தைக் காண்பார்கள் என்று கருதப்படுகிறது.

பொருளாதாரத்தை கட்டி எழுப்ப அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள்

கொவிட் – 19இன் தாக்கத்திற்குள்ளான தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு, கடன் மீள்செலுத்தலைப் பிற்போடுதல் (மூலதனம்+வட்டி) மற்றும் ஒரு தொழிற்படு மூலதனக் கடன் உள்ளடங்கலான ஒரு பரந்தளவிலான சலுகைகளை அறிமுகப்படுத்துவதென 2020.03.20இல் அமைச்சரவை அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கி ஓர் மீள்நிதியிடல் வசதியை உருவாக்கத் தீர்மானித்துள்ளது.

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக் கம்பனிகள் (நிதி நிறுவனங்கள்) ஆகியவை 2020.03.25இல் ஆரம்பமாகும் இம் மீள்நிதியிடல் வசதியில் பங்குபற்றுவதற்குத் தகுதியானவை என்பதோடு அவை அறிவிக்கப்பட்ட சலுகைகளையும் வழங்கலாம்.

அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப்பாடுகள் இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது, 2020 ஏப்பிரல் 15 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் முதன்மை கொள்கை வட்டி வீதங்களான துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன 2019 மே 31இலிருந்து 200 அடிப்படை புள்ளிகளால் ஒட்டுமொத்தமாக குறைக்கப்பட்டமையினை அவதானத்தில் கொண்டு, வங்கி வீதத்தினை +300 அடிப்படை புள்ளிகள் எல்லையுடன் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் தன்னியக்கமாக சரிசெய்துகொள்ள அனுமதிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது.

அதன்படி, 2020 ஏப்பிரல் 16 இலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில், அவசர காலங்களில் பயன்டுத்திக்கொள்ளக்கூடிய நிருவாக ரீதியில் தீர்மானிக்கப்படுகின்ற வீதமான வங்கி வீதமானது, 15 சதவீதத்திலிருந்து 10 சதவீதத்திற்கு 500 அடிப்படை புள்ளிகளால் சிறப்பாக குறைக்கப்படுகின்றது.

2020ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டப் பணிப்புரைகளின் கீழ் குறிப்பாக விலக்கப்பட்டவை தவிர்த்து நாணயக் கடிதத்தின் கீழ் அனைத்து விதமான மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு வசதிப்படுத்தலினை இடைநிறுத்தல்.

நாணயக் கடிதம், ஏற்றுக்கொள்வதற்கெதிரான ஆவணங்கள் மற்றும் முற்கொடுப்பனவுகளின் கீழ் 2020ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் பணிப்புரைகளில் குறித்துரைக்கப்பட்டவாறான அத்தியாவசியமற்ற பண்டங்களிற்கான இறக்குமதிக்கு வசதிப்படுத்தலினை இடைநிறுத்தல்.

இலங்கையின் உரிமம்பெற்ற வங்கிகளினால் இலங்கைக்கான நாட்டிற்கான பன்னாட்டு முறிகளைக் கொள்வனவு செய்வதிலிருந்து இடைநிறுத்தல்.

தோன்றியுள்ள அனர்த்த நிலைமை காரணமாக சமூக நன்மை நிகழ்ச்சித்திட்டங்களின்கீழ் காத்திருக்கைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நலன்பெறுனர்களுக்காக ரூ. 5000/- கொடுப்பனவு செலுத்துதல் சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்குதல்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

பெருமளவிலான கழிவுத் தேயிலை கைப்பற்றல்!

எல்பிட்டிய பிரதேசத்தில் 5 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. ரத்கம பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. காலி - எல்பிட்டிய இணிகொடவல பிரதேசத்தில்...

Developed by: SEOGlitz