ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸின் பயணிகள் விமான சேவையின் தற்காலிகமாக இடைநிறுத்தமானது தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், சர்வதேச நாடுகளுக்கான ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸின் பயணிகள் விமான சேவை இடைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துவருவதை அடிப்படையாக கொண்டு, இந்த தற்காலிக இடைநிறுத்தத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் மே 15 ஆம் திகதிவரை இந்த தற்காலிக தடை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சரக்கு விமானங்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனாவை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு அமைவாக, மருத்துவ தேவை மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவருவதற்கும் தேவையான விமான சேவையை முன்னெடுக்கவும் தயாராக இருப்பதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.