மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாயிகளுக்கு அரசு உத்தரவாத விலைகளை அறிவித்தது!

- Advertisement -

நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக விவசாயத் துறையை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் விவசாயிகளின் வருமானத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் சிறு போகத்தில் 14 முக்கிய பயிர்களுக்கு உத்தரவாத விலைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை இன்று அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தனா இதனைத் தெரிவித்தார்.

- Advertisement -

விதைகளையும் இலவசமாக வழங்க அமைச்சரவை அணுமதி அளித்தது, பயிர்களுக்கு நிலையான விலைகள் அறிமுகப்படுத்தப்படுவதால், விவசாயிகள் எந்தவித அச்சமும் இன்றி விவசாயத்தில் ஈடுபட முடியும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கம் எதுத்துவரும் நடவடிக்கையால் தேசிய உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பு 8 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டாக்டர் ரமேஷ் பதிரானா தெரிவித்தார்.

பயிர்களின் விலைகள்:

சோளம் – 50.00
உருளைக்கிழங்கு – 100.00
பெரிய வெங்காயம் – 100.00
சிவப்பு வெங்காயம் – 110.00
பச்சை உழுந்து – 200.00
வேர்க்கடலை – 220.00
மிளகாய் – 650.00
சோயா – 125.00
குரக்கன் – 175.00
எள்ளு – 200.00
கொள்ளு – 250.00
மஞ்சள் – 80.00
இஞ்சி – 125.00
பூண்டு – 350.00
கௌப்பி -220.00
பயறு – 220.00

தொடர்புபட்ட செய்திகள்

Related News

CSK அணி குறித்து வெளியான தகவல்!

சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையுமில்லை: ம.வி.மு கருத்து!

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

தேசிய பால் உற்பத்தியை 70 வீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த பால் தேவையில் 40 வீதம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் மூலமும், மிகுதி 60 வீதம் இறக்குமதி செய்யப்படும்...

பொதுமக்கள் சந்திப்பு தினம் குறித்து விடுத்துள்ள கோரிக்கை!

பொதுமக்கள் சந்திப்பு தினத்தில் மக்கள் முகம்கொடுக்கும் சிக்கல்கள் குறித்து அறியத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. திங்கட்கிழமை பொதுமக்கள் சந்திப்பு தினமாக அரசாங்கத்தினால் பிரகடப்படுத்தப்பட்டுள்...

நாட்டில் சில பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரும்! எச்சரிக்கை!

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை தொடருமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்...

Developed by: SEOGlitz