வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் வவுனியா மகாகச்சகொடி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்த கடற்படை வீரரிடம் மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனையின் போதே குறித்த வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது 26 ஆம் திகதி தெரியவந்தது.
குறித்த கடற்படை வீரர் வவுனியாவில் சென்ற இடங்கள் குறித்த தகவல்களை சுகாதார திணைக்களத்தினர் வெளியிட்டுள்ளனர். பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள சேவீஸ் நிலையம், மற்றும் பலசரக்கு வாணீபம், இ. கந்தசாமி கோவில் வீதியில் அமைந்துள்ள இரு வாகன உதிரிப்பாக விற்பனை நிலையங்கள், பிரபல ஆடை விற்பனையகம், இரண்டாம் குருக்குத்தெரு வீதியிலுள்ள காப்புறுதி நிலையம் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளார்