யாழ்ப்பாணதிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 2000 நபர்கள் மருத்துவ நெறிமுறைகளுக்கு அமைவாக அவர்களின் இடங்களுக்குப் அனுப்பப்பட்டதாக யாழ் மாவட்ட செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.
5,000 பேரில் 2000 பேர் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர் என்றும் மீதமுள்ளனர் மருத்துவ பரிசோதனைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். “அனைத்து மருத்துவ செயல்முறைகளும் பிற நெறிமுறைகளும் முடிந்ததும், சிக்கித் தவிக்கும் நபர்களை நாங்கள் படிப்படியாக அனுப்புகிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களில் பல்வேறு காரணங்களுக்காக 5000 பேர் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளனர், கோவிட் -19 வைரஸ் காரணமாக இந்த மக்கள் திரும்பி செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
அதிக ஆபத்துள்ள இடங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக்குள் உள்ள சொந்த இடங்களுக்கு, அந்த இடங்களின் நிலைமை வழமைக்கு திரும்பும் வரை அனுப்பப்பட்ட மாட்டார்கள் என்று மகேசன் சுட்டிக்காட்டினார்.