மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேலியகொடை மீன் சந்தை குறித்து வெளியான தகவல்..!

- Advertisement -

பேலியகொடை மீன் சந்தை மொத்த விற்பனை  நடவடிக்கைகளுக்காக  நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக பேலியகொடை மீன் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 22ஆம் திகதி மீன் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுகின்ற பிலியந்தல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது.

- Advertisement -

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட குறித்த மீன் வியாபாரி, கடந்த 18 ஆம் திகதி பேலியகொடைமீன் சந்தைக்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து  பேலியகொடை மத்திய  மீன்சந்தை மூடப்பட்டது.

இதேவேளை, பேலியகொடை  மத்திய மீன்சந்தை  வர்த்தகள் 529 பேர் நேற்று  PCR பரிசோதனை  நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதற்கமைய, பேலியகொடை மத்திய மீன்சந்தை   வர்த்தகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பேலியகொடை மீன் சந்தை மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக  நாளை முதல்  திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு கொண்டுவர முடியும்: மனோகணேஷன் கருத்து!

சிங்கள மக்களின் அதிக விருப்புக்களை கொண்ட ஒருவருக்கே இந்த நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு கொண்டுவர முடியும்  என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேஷன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள்!

திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த அமைச்சர் உதய கம்மன்பில இதனைக்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

சில தரப்பினரின் தேவைகளுக்கு இணங்கவே ஸஹ்ரான் ஹாசிம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையானதன்...

சஜித்தின் இணைப்புச் செயலாளராக சமித் விஜேசுந்தர நியமனம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இணைப்புச் செயலாளராகவும், சிறப்புப் பிரதிநிதியாகவும் சமித் விஜேசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அதற்கான நியமனக் கடிதம் சஜித் பிரேமதாசவினால் வழங்கிவைக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்வைத்து இந்த நியமனம் வழங்கிவைக்கப்பட்டமை...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம்!

நாட்டில் கொரோனா தொற்றுகுள்ளான மேலும் 10 பேர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமானிலிருந்து வருகைத்தந்த 7 பேருக்கும், கட்டார், ஐக்கிய அரபு...

Developed by: SEOGlitz