மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெளத்த மகாசங்கத்தினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

- Advertisement -

கொரோனா ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து பெளத்த மகாசங்கத்தினர்களுக்கு நான் விளக்கினேன்.

இன்று பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மூன்று நிகாயக்களையும் சேர்ந்த மகாசங்கத்தினருக்கு நான் எனது விளக்கத்தை வழங்கினேன்.

- Advertisement -

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தல், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், மக்களுக்கு வழங்கிய நிவாரணங்கள் மற்றும் எதிர்காலத்தில் சுதேச பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்தும் நான் அவர்களுக்கு விளக்கினேன்.

நாடு முகம்கொடுத்துள்ள சவால்களுக்கு மத்தியில் சுகாதார, பாதுகாப்பு துறைகளும் முழு அரச இயந்திரம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டத்தக்கதாக இருந்ததாக நான் குறிப்பிட்டேன்.

தனக்கு பெரும் மக்கள் ஆணையொன்றினை வழங்கி மக்கள் தன்மீது வைத்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பலமானதெரு பாராளுமன்றத்தின் தேவையை விளக்கிய நான் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதை விடுத்து பழைய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இல்லை என்றும் குறிப்பிட்டேன்.

ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் வெள்ளிக்கிழமை மகாசங்கத்தினரை சந்திப்பதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட நான் அதற்கு மூன்று நிகாயக்களினதும் மகாசங்கத்தினருக்கு அழைப்பு விடுத்தேன். நான் பதவியை ஏற்ற போது ருவன்வெலிசேயவிலும் நான் கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட வேலையிலும் தான் குறிப்பிட்டதைப் போன்று மகாசங்கத்தினரின் ஆசிர்வாதம் மற்றும் வழிகாட்டல்களை மனமுவந்து எதிர்பார்ப்பதாகவும் நான் தெரிவித்தேன்.

அனைத்து மகாசங்கத்தினரினதும் முழுமையான ஆசிர்வாதம் எனது தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு உள்ளது என்று இதன்போது கருத்துத் தெரிவித்த மகாசங்கத்தினர் தெரிவித்தனர்.

பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி நாட்டை குழப்பமான நிலைக்கு உள்ளாக்க வேண்டியதில்லை என்றும் பழைய பாராளுமன்றத்தை கூட்டக்கூடாது என்பது மகாசங்கத்தினரின் ஏகமனதான தீர்மானம் என்றும் மகாசங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.

முன்னர் இருந்த பாராளுமன்றம் நாட்டின் தற்போதைய நிதிப் பிரச்சினைக்கு வகைகூறவேண்டும் என்று மல்வத்தை பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் குறிப்பிட்டார்.

வைரஸ் ஒழிப்புக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை நோக்கும் போது புதியதொரு சிந்தனையொன்று நாட்டில் நடைமுறையாவது தெளிவாகிறது. அது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்திற்கு ‘சுபீட்சத்தின் சிந்தனை’ என இணைக்கப்பட வேண்டிய உப பிரிவாகும் என அமரபுர ஸ்ரீ தர்மரக்சித நிகாயவின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய திருக்குணாமலயே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.

கொரேனா வைரஸ் ஒழிப்பில் நான் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்;டங்களில் உலகின் ஏனைய நாடுகளுக்கும் பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்று பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டார். நாட்டின் இளைய தலைமுறை மற்றும் பல்வேறு குழுக்கள் பல புத்தாக்கங்களை செய்துள்ளனர். அவை எதிர்காலத்திற்கு வழிகாட்டும் பொன்னான சந்தர்ப்பம் என்றும் எனது நிகழ்ச்சித்திட்டங்களுக்கு மகா சங்கத்தினர் தொடர்ந்தும் பலமாக இருப்பார்கள் என்றும் தேரர் அவர்கள் குறிப்பிட்டார்.

பேராசிரியர் சங்கைக்குரிய இந்துராகாரே தம்மரத்ன தேரர் தாய்நாட்டை பாதுகாப்பதற்கு உதவும் 12விடயங்களை உள்ளடக்கிய முன்வொழிவொன்றை முன்வைத்தார்.

இம்முறை வெசாக் பண்டிகையை இலத்திரனியல் ஊடகங்களை பயன்படுத்தி வீட்டிலிருந்தவாறு கொண்டாடுவதற்கு தேவையான பின்புலத்தை ஏற்படுத்துவதன் அவசியத்தை கலாநிதி சங்கைக்குரிய திவியகஹ யஸஸ்ஸி தேரரும் பேராசிரியர் தும்புல்லே சீலகந்த தேரரும் சுட்டிக்காட்டினர். அதற்காக குழுவொன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அனைத்து மக்களினதும் பசியை போக்குவதற்கு நான் மேற்கொண்ட நடவடிக்கைகளை மகாசங்கத்தினர் பாராட்டுவதாக அஸ்கிரி பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர் குறிப்பிட்டார்.

மூன்று நிகாயக்களினதும் மகாசங்கத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தி மகாநாயக்க தேரர்கள் மற்றும் அநுநாயக தேரர்கள் உள்ளிட்ட தேரர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz