நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 63 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுள் 53 பேர் கடற்படை உறுப்பினர்கள் என ராணுவம் தெரிவித்துள்ளது.
ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 63 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
இதேவேளை முன்னதாக, கடந்த 24ஆம் திகதி 52 பேரும், நேற்று முன்தினம் 40 பேரும் அடையாளம் காணப்பட்டமை அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவான சந்தர்ப்பமாக அமைந்திருந்தது.
இதன்படி, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 523 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.