நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 416 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சு இன்று மாலை விடுத்துள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட தினமான இன்றைய தினம் பதிவாகியுள்ளது
இதற்கமைய, இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 48 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் மேலும் 30 பேர் இன்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மேலும் ஐந்து கடற்படை உத்தியோகத்தர்கள், தமது ஊர்களுக்கு சென்றிருந்த வேளையில், பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்படி, இரத்தினபுரி, குருநாகல், பொல்கஹவெல, பதுளை மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதிகளில் இருந்த நிலையிலேயே, அவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.