மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட உத்தரவை மீளப் பெறுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

- Advertisement -

நாட்டில்  கொரோனாவின் தாக்கம் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை மீண்டும்  கூட்ட வேண்டும் என எதிர்க் கட்சியினர் ஜனாதிபதியிடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேஷன் மற்றும் ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, நாடாளுமன்றத்தைக் கூட்டி, அரசியல் கட்சிகளினதும், நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது ஏற்பட்டுள்ள சவாலை முறியடிப்பதற்கு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில், பொறுப்புணர்வு கலந்த ஒத்துழைப்பை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், நாட்டினதும், மக்களினதும் நன்மைக்காக, தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தவிர்த்து செயற்பட வேண்டியது அனைத்து அரசியற் கட்சிகளினதும், தலைவர்களினதும் கடமையாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம், கடந்த மார்ச் மாதம் இரண்டாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள வைரஸ் தாக்கத்தை, ஒன்றிணைந்து ஒழிப்பதற்காக  நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பிரகடனத்தை இரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது

இதற்கமைய, தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டதன் பின்னர்,  ஜனாதிபதிக்கு மீண்டும் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் எனவும் குறித்த கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு       தேர்தலொன்றை நடத்துவதற்கான சூழல் ஏற்பட சாத்தியமில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கலைக்கட்டப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும்  கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நாட்டினதும், நாட்டு மக்களினதும் நன்மை கருதியே தாம் முன்வைப்பதாகவும், இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

உடனடியாக போர்நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி அழைப்பு!

ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கு இடையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான்...

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம்!

விஷம் கொடுக்கப்பட்டு ஜேர்மனியில் சிகிச்சை பெற்றுவரும் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றில் இன்று இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் தனது அரசியல் நடவடிக்கைகளைத்...

கட்சிக்குள் இருந்து தொடர்ந்தும் போராடுவேன் : சட்டத்தரணி மணிவண்ணன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக் கூடாது என்பதற்காக தான் தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன் என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள...

நிரபராதி என்பதாலேயே சகோதரர் விடுவிக்கப்பட்டார் : ரிஷாட்!

நிரபராதியாக இருந்தமையினாலேயே சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரவித்துள்ளார். வவுனியாவில் இன்று காலை ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக...

கிளிநொச்சிக்கு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க விஜயம்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பனை, தென்னை ஆகியவற்றின் அபிவிருத்திகள் தொடர்பாக விசேடமாக ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ நேரடி விஜயம் மேற்கொண்டு இன்று முழுமையாக ஆராய்ந்தார். அத்துடன், கிளிநொச்சி இயக்கச்சி...

Developed by: SEOGlitz