மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தலை யார் பிற்போட முயற்சிக்கின்றனர்?

- Advertisement -

ராஜபக்சக்கள் எப்போது தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்றினாலும், ஜனநாயகம் அழிந்துபோய் விடும் என்று கூறும் சிலர் இருக்க தான் செய்கிறார்கள்.

அதேநேரம் சிறுபான்மையினரை பெரும்பான்மையினரின் எதிரியாகவும் சித்தரித்து வருகின்றனர்.

- Advertisement -

சில பிராந்திய ஊடகங்கள் தற்போது இராணுவ ஆட்சி நடைபெறுகிறதோ என்றும் தலைப்பு செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்ப நிலையில் ஆழ்த்தி உள்ளனர்.

தெற்கில் இனவாதத்தை தூண்டும் சில அரசியல்வாதிகள் இருக்க, வடக்கில் தேர்தல் காலம் வந்தால், விடுதலை புலிகளை வைத்து அரசியல் செய்யும் நபர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

அவ்வாறு இருக்க, சில அரசியல்வாதிகள் முன்பு சொன்னதற்கு மாறாக, புலிகளுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சொல்லி வருகின்றனர்.

எதிர்க்கட்சி தேர்தலை ஒத்திவைக்க முயற்சி செய்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

நாடாளுமன்ற தேர்தலை தள்ளிவைத்தால், மார்ச் 2 நாடாளுமன்றத்தை கலைக்கும் விதத்தில் மற்றும் ஏப்ரல் 25 அன்று தேர்தல் நடக்கும் என்று வெளிவந்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யபடும். இதன் பிரகாரம் நாடாளுமன்றம் மீள கூட்டபடும்.

அதேவேளையில் எதிர்க்கட்சியை சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இதனை நன்கு அறிவார்கள்,

தற்போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய என்று இரண்டு தரப்பாக எதிர்கட்சி இருக்கின்றது,

தேர்தலுக்கு முகம் கொடுத்தால், தோல்வியை சந்திக்கும் என்றும். ஆதனால் தேர்தலை இரத்து செய்தால், அவர்களுக்கு ஒரு புது வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

இந்த பிளவுபட்ட இரு கட்சிகளையும் சேர்த்து சமரசம் செய்ய பாதையை உருவாக்குவதற்காகவே தேர்தலை ரத்து செய்ய முயற்சி எடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஜூன் 20 அன்று நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

ஆனால் எந்த தேர்தலிலும் ஒரு நிச்சயமற்ற தன்மை இருக்கத்தான் செய்யும், அதற்காக தான் ஆணைக்குழுவிற்கு தேர்தலை ஒத்திவைக்க அணைத்து அதிகாரமும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்த கருத்து தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்,

பத்திரிகைகளில் எழுதி பழக்கப்பட்டவர், அதனால் அவர் கருத்துக்களை தெரிவித்து இருக்கலாம், ஆனால் அது பொருத்தமற்றது.

இவ்வாறு இருக்க, கலைத்த நாடாளுமன்றத்தை மீள கூட்டுவதற்கு தனக்கு அதிகாரம் இல்ல என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த கருத்தை அவர். பௌத்த மகா சங்கத்தினரை சந்தித்த போது தெரிவித்துள்ளார்.

பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி நாட்டை குழப்பமான நிலைக்கு உள்ளாக்க வேண்டியதில்லை என்றும், பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டக்கூடாது என்பது தமது ஏகமனதான தீர்மானம் என்றும் மகாசங்கத்தினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும்   ஐவர்  அடையாளம் காணப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை குறித்து சற்று முன் வெளியான அதிர்ச்சித் தகவல்!

தமிழ் சினிமாவின் பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணித்தின் உடல்நிலை குறித்து வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இன்று மாலை வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...

தீவிபத்துக்குள்ளான கப்பல் தொடர்பான மற்றுமொரு அறிக்கை சமர்ப்பிப்பு!

கிழக்கு கடற்பரப்பில் MT NEW DIAMOND கப்பல் தீவிபத்துக்குள்ளான கப்பல் தொடர்பான கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையின் அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழாமின்...

கினிகத்தேன – கொழும்பு பிரதான வீதியூடான போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது!

கினிகத்தேன – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ரம்பதெனிய பகுதியில் சரிந்துவிழுந்த பாரிய கற்பாறை அகற்றப்பட்டுள்ளதையடுத்து  இன்று மாலை முதல் அவ்வீதி ஊடான போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியிருந்தன. கினிகத்தேன...

பொதுமயானத்தில் தீவிபத்து : ஏழு  பேர் படுகாயம்!

கொழும்பு கொட்டிகஹாவத்தை பொதுமயான தகனசாலையில் எரிவாயு வெடித்ததில் ஏழு  பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சடலம் ஒன்றை தகனம் செய்யும் போதே இந்த வெடிப்பு சம்பவம்...

Developed by: SEOGlitz