மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கை மீள ஆரம்பம்..!

- Advertisement -

சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்காக, சட்டமா அதிபரினால் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரிக்கு, கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தபடபட்டுள்ள நிலையிலேயே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் தொடர்பாடல் அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சட்டமா அதிபர் திணைக்களத்தில் சேவை புரிகின்ற அதிகாரியொருவர் உணவு பெற்றுக் கொள்ளும் வீட்டில், இருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, சட்டமா அதிபர் திணைக்களத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்து.

இந்த நிலையிலேயே, குறித்த அதிகாரிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்காக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

புதிய இராஜதந்திர அதிகாரிகள் எட்டு பேரை நியமிக்க அனுமதி!

புதிய இராஜதந்திர அதிகாரிகள் எட்டு பேரை நியமிக்க நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பிலான தெரிவுக்குழு இன்று பிற்பகல் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய,  ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாக C.A.சந்திரபிரேம, தென் ஆபிரிக்காவிற்கான இலங்கை...

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகும் – சங்ககார கவலை..!

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார கவலை வெளியிட்டுள்ளார். பாடகர் பாலசுப்ரமணியத்தின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Tragic loss of...

தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் குறித்து வெளியான தகவல்

அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில் தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் தடமேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் தேவி கடுகதி இரயில் அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில்...

மேல்மாகாண விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது!

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை முதல் இன்று அதிகாலை 5 மணிவரையான காலப்பகுதியில் முனனெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹெரோய் போதைபொருளுடன் 159 பேரும்,...

கண்டி மாவட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கெதிரான மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

கண்டி மாவட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய...

Developed by: SEOGlitz