மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா வைரஸ்: புதிய தகவல்

- Advertisement -
  • நாட்டில் COVID-19 தொற்றின் எண்ணிக்கை நேற்று இரவு (26) 500 தொற்றுக்களை தாண்டியுள்ளது, நள்ளிரவுக்குள் 523 தொற்றுகள் பதிவுசெய்யப்பட்டது.
  • விடுமுறையில் இருக்கும் படை வீரர்கள் முகாம்களுக்கு திரும்புவதற்காக, இன்று நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
  • COVID-19 நோய்த்தொற்றுகளைக் கண்டறிவதற்கான சோதனை செயல்முறையை மேற்கொள்ள பேராதெனிய, கொழும்பு, மற்றும் கெலனிய பல்கலைக்கழகங்கள் பரிசோதனை ஆய்வகங்களை அமைக்கத் தயாராக உள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
  • ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஈரான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தினசரி தொற்றுக்கள் மற்றும் இறப்புகள் மெதுவாக குறைவடைந்து வருவதால், மே 4 முதல் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை எளிதாக்க நடவடிக்கை எடுக்க உள்ளன.
  • குறைந்தது 1.3 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் அரசாங்கத்தின் COVIDsafe App பை பயன்படுத்தி உள்ளனர். பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்த நிலைமையை நல்ல விதமாக கையாழ்ந்தமைக்கு அவருக்கு ஆதரவு பெருகிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
  • குணமடைந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காலத்தின் மிகப் பெரிய சவாலை சந்திக்க வேலைக்கு திரும்புகிறார்: கொரோனா தொற்றின் பயங்கரமான இரண்டாவது அலையை தூண்டாமல் பிரிட்டிஷ் பொருளாதாரத்தை அளித்துவரும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை எவ்வாறு நீக்குவது?
  • உலகளவில், கொரோனா வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தியவர்களின் எண்ணிக்கை 2.97 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, குறைந்தது 206,000 பேர் இறந்து இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 868,000 பேர் குணமடைந்துள்ளனர்.
  • உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களுக்குஎப்போதும் இல்லாத போன்று ஒரு ரமலான் ஆகும், பொதுவாக தொழுகைக்காக நிரம்பியிருக்கும் மசூதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன, மேலும் சில இடங்களில் பூட்டப்பட்டிருக்கும் மசூதிகளையும் காணக்கூடியதாக இருந்தது.
  • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நிறுவனங்கள், ஐரோப்பிய ஆணையத்தால் முன்மொழியப்பட்ட புதிய நடவடிக்கையின் கீழ், 2019 வருவாயில் 5% வரை அரசாங்கக் கடனைக் கேட்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த...

சில மாகாணங்களில் பலத்த மழை – சற்று முன்னர் வெளியான அறிக்கை…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

சுற்றுலா இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன…!

அனைத்து சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் கோர விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு...

Developed by: SEOGlitz